பொது செய்தி

தமிழ்நாடு

செல்லப்பிராணி விற்பனையகத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் செல்ல பிராணிகள் விற்பனை கடைகளில் வனத்துறையினர் ஆய்வு செய்து, கடைகளின் இருப்பிடம், 'ஜி.பி.எஸ்., லொகேஷன்' மூலம் பதிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில், ஆறு செல்லப்பிராணிகள் விற்பனை கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில், நாய்க்குட்டிகள், வளர்ப்பு பறவைகள், வண்ண மீன்கள், பூனைகள் உள்ளிட்ட செல்ல பிராணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு சில கடைகளில், தடை செய்யப்பட்ட கடல், வன உயிரினங்கள் விற்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன. சமீபத்தில், இந்தியாவில் விற்கவும், வளர்க்கவும் தடை செய்யப்பட்ட ஆமைகள், பொள்ளாச்சியில் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், நேற்று வனத்துறை தலைமை அலுவலகத்தின் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், செல்லப்பிராணிகள் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.கடைகளுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா, உரிமம் முறையாக புதுப்பிக்கப்படுகிறா, பிராணிகளுக்கு உகந்த சூழல், தட்பவெப்பம் பராமரிக்கப்படுகிறதா, தேவையான இட வசதி, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டது.கடைகளின் இருப்பிடம், 'ஜி.பி.எஸ்., லொகேஷன்' முறையில் பதிவு செய்யப்பட்டது.

வனத்துறையினர் கூறுகையில், 'இந்திய வனச்சட்டம், 1972ன் படி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் உள்ள பிராணிகள் விற்கப்படுவதை தடுக்கவும், அச்சட்டம் குறித்து செல்லப்பிராணி விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.பிராணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும் ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டது,' என்றனர்.
மேலும், கடைகள் மற்றும் தனிநபர்கள், தடை செய்யப்பட்ட விலங்குகளை விற்பனை செய்வது தெரியவந்தால், பொதுமக்கள் வனத்துறை அலுவலகங்களில் புகார் அளிக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X