சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,மில் நூதன திருடியவருக்கு வலை

Added : பிப் 12, 2020
Share
Advertisement

திருச்சி: -ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்த பெண்ணிடம், நுாதன முறையில், 11 ஆயிரம் ரூபாய் திருடியவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே உள்ள, புங்கனுாரைச் சேர்ந்த, பிரபு மனைவி கமலி, 24. இவர், நேற்று முன்தினம் மதியம், கருமண்டபத்தில் உள்ள, ஏ.டி.எம்., ஒன்றில், பணம் எடுக்க சென்றார்.அங்கிருந்த, ஒரு வாலிபரிடம், கார்டை கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.

அவரும், 5,000 ரூபாய் பணம் எடுத்து கொடுத்து விட்டார். பின், அவரது கார்டை திருப்பித் தரும்போது, வேறு கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கமலி, அங்கிருந்து சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில், கமலியின் கணக்கில் இருந்து, 11 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக, அவரது மொபைல்போனுக்கு தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து கமலி, சம்பந்தப்பட்ட வங்கியிலும், கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசிலும், புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி ஆசாமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X