பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியால் தேங்காய் உற்பத்தி குறைந்தது

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை : 'வறட்சி மற்றும் பருவநிலை மாற்றங்களினால், தேங்காய் உற்பத்தி குறைந்து வருவாய் இழப்பதை தடுக்க, தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்,' என தோட்டக்கலைத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

உடுமலை சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. பருவநிலை மாற்றம், நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால், மரங்களில், காய்ப்புத்திறன் வெகுவாக குறைகிறது.இதனால், தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயரும் போதும், உற்பத்தி இல்லாமல், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.தென்னந்தோப்புகளில், வருவாய்க்காக தென்னை மரங்களை மட்டும் நம்பியிருக்காமல், பல அடுக்கு ஊடுபயிர், தேனீ வளர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.பல்வேறு காரணங்களால், தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில், ஊடுபயிர் மற்றும் தேனீ வளர்ப்பு ஆகியவற்றால், ஒரு நிலையான வருவாய் விவசாயிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதில், தோட்டக்கலைத்துறை சார்பில், தேனீ வளர்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மானியங்களும், பயிற்சியும் முன்பு வழங்கப்பட்டது.தேனீ வளர்ப்பால், வருவாய் மட்டுமல்லாது, சாகுபடி பயிர்களில், மகரந்த சேர்க்கை சிறப்பாக நடந்து, விளைச்சல் அதிகரிக்கும். தென்னை மரங்களில் காய்ப்பு திறன் குறைவதற்கு மகரந்த சேர்க்கை பாதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகளவு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியதால், இயற்கையாகவே மரங்களில் தேனீக்கள் கூடு கட்டுவது பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இயல்பான மகரந்த சேர்க்கை குறைந்துள்ளது.எனவே வருவாய் மற்றும் காய்ப்பு திறனுக்காக தென்னந்தோப்புகளில் தேனீக்கள் வளர்ப்பது அவசியமாகியுள்ளது. தோட்டக் கலைத்துறையினர் கூறியதாவது: தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக காய்கறிகள், கீரைகள், தீவனப்புல், கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் ஊடுபயிரில், மகசூல் அதிகரிக்க, தேனீக்கள் வளர்க்கலாம். அயல்மகரந்த சேர்க்கை பணியை தேனீக்கள் மேற்கொள்வது மகசூலுக்கு உதவியாக இருக்கிறது.

ஒரு ஏக்கர் பரப்பில், 20 பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்க்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேனை பெட்டிகளில் இருந்து சேகரித்து, விற்பனை செய்யலாம்.மகரந்த சேர்க்கை பாதிப்பால், ஆண்டுதோறும் பல ஆயிரம் டன் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கவும், கூடுதல் வருவாய் பெறவும், விவசாயிகள் விளைநிலங்களில் தேனீ வளர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X