அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நெல் கொள்முதல் முறைகேடை தடுக்க

Added : பிப் 12, 2020
Advertisement

தஞ்சாவூர்: ''டெல்டா மாவட்டங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில், விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விற்பனைக்காக பல நாட்கள் காத்துக்கிடக்கின்றனர்.நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து, மூட்டைக்கு, 30 - 40 ரூபாய், அதிகாரிகள் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து நேற்று காலை, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை இயக்குனர் பிரதீப் வி பிலிப் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க, 12 குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், 389; திருவாரூரில், 458; நாகையில், 498; பிற மாவட்டங்களில், 310 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இதுவரை, 5.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களின் வங்கிக்கணக்கில், 1,021 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X