பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு; ஆசிரியர்களுக்கு பயிற்சி

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, 'பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.'சைல்டு ெஹல்த் லைன்' நிர்வாகி சுலேகா, ஆசிரியர் இன்ப ஜெயந்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்னலட்சுமி, நேரு ஆகியோர் கருத்தாளர்களாக பயிற்சி அளித்தனர்.வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 100 பள்ளிகளில், 203 ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக, 83 ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பங்கேற்றனர். இதேபோன்று, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் முகாம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மற்றும் தெற்கு வட்டார வள மையம் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர் பயிற்சியினை துவக்கி வைத்தனர்.ஆசிரியர் பயிற்றுநர்கள் காளிமுத்து, பாக்கியலட்சுமி பயிற்சி அளித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு பற்றி தெரிவிக்கப்பட்டது.

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.கருத்தாளர்கள் கூறியதாவது:பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கையேட்டின் நோக்கம், கையேட்டின் வரம்பு, பள்ளி பாதுகாப்பின் படிநிலைகள், கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.பள்ளி சுற்றுச்சுவர் பாதுகாப்பு வசதி, இயற்கை இடர்பாடுகளை தாங்கி உயிர் சேதம் ஏற்படாத வகையில் பள்ளி கட்டடம் கட்டப்பட வேண்டும்.

கட்டடமானது மாணவர்கள் படிப்பதற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். மழலையர் மற்றும் ஆரம்ப நிலை பள்ளிகள் தரை தளத்தில் இருக்க வேண்டும்.குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உளவியல் மற்றும் சமூக நோக்கங்கள் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X