சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : பிப் 12, 2020
Advertisement
 கொலை, தற்கொலை, பலி

கந்துவட்டி கொடுமையால்ஒருவர் தற்கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த பெரியகோட்டை காடு கிராமத்தை சேர்ந்தவர், நாடிமுத்து, 34; தச்சு தொழிலாளி. இவர், அப்பகுதியைச் சேர்ந்த இருவரிடம், 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிஉள்ளார்.அசலையும், வட்டியையும் கேட்டு, இருவரும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த நாடிமுத்து, 1ம் தேதி விஷம் குடித்தார். தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாடிமுத்து, சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.நாடிமுத்து மனைவி விஜயா அளித்த புகாரின்படி, கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்த நபர்களை, ஒரத்தநாடு போலீசார் தேடி வருகின்றனர்.

லாரி மோதி தொழிலாளி பலி
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், நாகை அடுத்த பாப்பாகோவில் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜான்பிரபாகர், 38; கூலிதொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி மற்றும் 8 வயது மகனுடன், நாகையில் இருந்து பாப்பாகோவிலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.நாகை மேலகோட்டைவாசல் பகுதியில், எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜான்பிரபாகரனின் தலையில், லாரியின் முன்பக்க டயர் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவருக்கும் காயம் ஏற்பட்டது.நாகை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

நர்சிங் மாணவி துாக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் மகள் திவ்யா, 20; தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்தார். திவ்யா நேற்று, விடுதி அறையில் உள்ள மின் விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

யானை தாக்கி விவசாயி மரணம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியில், யானைகள் நடமாட்டம் உள்ளது. சிறப்பு விரைவுப்படை, பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியது. இருப்பினும், யானைக் கூட்டம், அதே பகுதியில் சுற்றி வருகிறது.நேற்று அதிகாலை, பழனிக்கவுண்டன்புதுார் தோட்டத்துசாலை பகுதியில், யானைகள் புகுந்தன. ஒரு குடிசையின் மேற்கூரையை சேதப்படுத்தி, உள்ளே துாங்கிய வெள்ளையனை, 70, மிதித்துக் கொன்றன.போலீசார், வெள்ளையனின் உடலை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X