பொது செய்தி

தமிழ்நாடு

'3 சதவீத சாலைகளில் 40 சதவீத உயிரிழப்பு' : போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

Added : பிப் 12, 2020
Advertisement

திருநெல்வேலி: தமிழகத்தில், 3 சதவீதம் மட்டுமே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தான், 40 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுவதாக, போக்குவரத்து துறை ஆணையர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.

திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சாலைகள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமை வகித்தார்.

கூட்டத்திற்குப் பின் அவர் கூறியதாவது:கடந்த, 2016ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த விபத்துகளில், 17 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இது, இந்தியாவிலேயே மிக அதிகம். 2019ல் இறப்பு எண்ணிக்கை, 10 ஆயிரமாக குறைந்து உள்ளது. தமிழகத்தில், 2.90 கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதில், 2.40 கோடி இருசக்கர வாகனங்கள். இவற்றால் தான் அதிகம் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, ஓட்டுனர் உரிமம் வழங்குவது கடுமையாக்கப்படும்.தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை, 3 சதவீதம் தான் உள்ளது.

ஆனால், அதில்தான், 40 சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மதுரை - கன்னியாகுமரி வரையிலான நான்கு வழிச்சாலை, ஆறு ஆண்டுகளாக பராமரிக்கப்படாதது குறித்தும், நாங்குநேரி சுங்கச்சாவடியில், அடிப்படை வசதியில்லாமல் வரி வசூல் செய்வது குறித்தும், நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X