பொது செய்தி

தமிழ்நாடு

தானிய ஈட்டுக்கடன் வழங்கணும்

Added : பிப் 12, 2020
Share
Advertisement

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் பொருளீட்டு கடன் ஆகிய கடன்களை பெற்று வருகின்றனர்.

அறுவடை காலங்களில், விளைபொருட்களுக்கு செயற்கையாக விலை வீழ்ச்சி ஏற்படுத்தப் படுவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.இதைத்தவிர்க்க, விவசாயிகள், ஊரக கிட்டங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குட்பட்ட குடோன்களில் விளைபொருட்களை இருப்பு வைக்கின்றனர். இவ்வாறு, இருப்பு வைக்கப்படும் விளை பொருளுக்கு, 7 சதவீத வட்டியில், தானிய ஈட்டுக்கடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது.

தற்போது, உடுமலை சுற்றுப்பகுதியில், மானாவாரியாக பயிரிடப்பட்ட, மொச்சை, கொண்டைக்கடலை, கொத்தமல்லி, மக்காச்சோளம் ஆகிய சாகுபடியில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.உரிய விலை கிடைக்க, விவசாயிகள் விளைபொருளை இருப்பு வைத்து விற்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, ஊரக கிட்டங்கியில் இருப்பு வைப்பவர்களுக்கு தானிய ஈட்டுக்கடன் அதிகளவு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X