84 பேருக்கு கோவிட் - 19 இல்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

84 பேருக்கு 'கோவிட் - 19' இல்லை

Added : பிப் 12, 2020
Share

சிவகங்கை: ''சீனாவில் இருந்து மருத்துவ மாணவர், ஊழியர் என, 84 பேர், சிவகங்கைக்கு வந்துள்ளனர். இவர்களில் யாருக்கும், 'கோவிட் - 19' வைரஸ் அறிகுறி இல்லை. இருப்பினும், அவர்களை கண்காணிப்பில் வைத்துள்ளோம்,'' என, சிவகங்கை டீன் ரத்தினவேல் தெரிவித்தார்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில், 'கோவிட் - 19' வைரஸ் சிறப்பு வார்டில், மருத்துவ தேர்வு வாரிய தலைவர் ராஜசேகரன் சோதனை நடத்தினார். கலெக்டர் ஜெயகாந்தன், டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின், மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறியதாவது:சீனாவில் இருந்து மருத்துவ மாணவர், ஓட்டல் ஊழியர் என, 84 பேர், சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.அதில், இளையான்குடியைச் சேர்ந்தவருக்கு, திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள, 'கோவிட் - 19' வைரஸ் சிறப்பு வார்டில் வைத்து கண்காணிக்கிறோம். மற்றவர்களை, அவரவர் வீட்டில் வைத்தே, சுகாதார குழுவினர் கண்காணிக்கின்றனர். யாருக்கும், 'கோவிட் - 19' வைரஸ் அறிகுறி இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X