பொது செய்தி

தமிழ்நாடு

இடிபடும் கோர்ட் கட்டடங்கள் நீதிபதியை சந்திக்கும் வக்கீல்கள்

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குள் வரும் உடுமலை ரோடு, கோவை ரோடு, வால்பாறை மற்றும் பாலக்காடு ரோடு ஆகியன விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

இதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தி, அதிலுள்ள கட்டுமானங்களை இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர். ரோடு விரிவாக்கப்பணியால் பாதிக்கப்படும் அரசு அலுவலகங்கள் செயல்பட, மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இச்சூழலில், உடுமலை ரோட்டில் உள்ள கோட்ட தபால் அலுவலகத்தின் மூன்று தளங்களிலும் குறிப்பிட்ட அளவு இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

மாற்று இடத்துக்காக தபால் துறை அதிகாரிகள் இடம் தேடி அலையும் நிலையில், கட்டடம் இடிக்கப்படுவதால், பரிதவித்து வருகின்றனர்.அதேபோல, தற்காலிக இடம் கிடைக்காத நிலையில், கால அவகாசம் நீட்டிக்க இயலாத நிலையில், கோர்ட் கட்டடத்தை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் தயாராகி வருகின்றனர். கோர்ட் செயல்பட பழைய தாசில்தார் அலுவலகத்தை ஒதுக்கியும், வழக்கு விசாரணைக்கு தகுந்தவாறு, கட்டட உள்கட்டமைப்பு மாற்றவில்லை.

பணி மேற்கொள்ள செலவு தொகைக்கு அரசிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், நீதித் துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதையடுத்து, கோவை மாவட்ட நீதிபதியை நேரில் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் இன்று கோவை செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X