சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் போலீசார் ரகளை ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு

Added : பிப் 12, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே குடிபோதையில் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட மூன்று போலீசார், ஆயதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

பொள்ளச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார், விக்னேஷ், 25, திவாகரன், 25 மற்றும் சிபிச்சக்கரவர்த்தி, 28. மூன்று பேரும் நேற்று முன்தினம் பேக்கரி உரிமையாளர் அமர்தீன் என்பவருடன் மது அருந்தியுள்ளனர்.பிறகு, நள்ளிரவு, 2:00 மணியளவில், அமர்தீனின் காரில், புளியம்பட்டியில் உள்ள இரவு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். ஓட்டல் உரிமையாளர் சரவணகுமார், 33 என்பவருக்கும், அமர்தீனுக்கு முன்விரோதம் இருந்துள்ளது.

இருவருக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், போலீசார் அமர்தீனுக்கு ஆதரவாக ஓட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளனர். ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், அமர்தீனின் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசாரிடம் இரு தரப்பினரும் புகார் அளித்தனர்.தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி., குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X