பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களை பாதுகாக்கும் காலணி: தஞ்சை கல்லுாரி மாணவியர் கண்டுபிடிப்பு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (5)
Advertisement
பெண்கள், பாதுகாப்பு, காலணி, பெண்கள்பாதுகாப்பு,தஞ்சை, கல்லூரிமாணவிகள, மாணவிகள், கல்லூரி, கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: ஆபத்தில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில், தஞ்சை கல்லுாரி மாணவியர், புதிய காலணியை கண்டுபிடித்து உள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர், அமிர்தகணேஷ், 33; பி.இ., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.இவர், 600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுப்பிடித்துள்ளார்.தஞ்சையில், தனியார் கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிக்கும் சங்கீதா, சவுந்தர்யா, வினோதினி மற்றும் மணிகண்டன் ஆகியோர், இவருடன் இணைந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.சில்மிஷத்தில் ஈடுபடுவோரிடம் இருந்து, பெண்கள் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், புதிய கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.'ஒயர்லெஸ் ரிசீவர், பேட்டரி, எலக்ட்ரோடு' ஆகியவற்றால், சிறிய அளவிலான கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இது பொருத்தப்பட்ட காலணியை அணிந்து செல்லும்போது, யாரேனும் அத்துமீறலில் ஈடுபட்டால், பெண்ணின் உடலில் ஏற்படும் படபடப்பு அதிகரிப்புக்கு ஏற்ப, காலணியில் பொருத்தப்பட்டுள்ள கருவி, இயங்கத் துவங்கி விடுகிறது.அதை தொடர்ந்து, 100 மீ.,க்கு கேட்கும் அளவிற்கு, அலாரம் ஒலிப்பதோடு, எதிரியின் மீது காலணியை வைத்தால், 'ஷாக்' அடிக்கும் வகையிலும், கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், காலணியில் பொருத்தப்பட்டுள்ள கருவிக்கு, 'சார்ஜ்' போட வேண்டிய அவசியமில்லை. காலணியை அணிந்து நடக்கும் போதே, 'ரீசார்ஜ்' ஆகும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை செல்போன், வாட்ச் போன்ற பொருட்களிலும் பொருத்தலாம்.

இது குறித்து, மாணவியர் கூறியதாவது:கல்லுாரிக்கு செல்லும் வழியில், இரண்டு, 'டாஸ்மாக்' கடைகளை கடக்க வேண்டும். கல்லுாரிக்கு சென்று திரும்பும் போது, பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.முதற்கட்டமாக, இந்தக் கருவியை, நாங்கள் அணிந்து, கல்லுாரிக்கு செல்ல இருக்கிறோம். இக்கருவி, எங்களுக்கு உதவியாக இருந்தால், முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-பிப்-202011:13:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொதுவா நான் இந்நாள் பொரியல் கல்லூரி மாணவர்களை கலாய்ப்பது வழக்கம், ஆனால் அமிர்தகணேஷ், 33 பி.இ., எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார். இவர், 600க்கும் மேற்பட்ட கருவிகளை கண்டுப்பிடித்துள்ளார் என்பது கண்டு மகிழ்வடைகிறேன். இந்த செய்தியில் உள்ள கண்டுபிடிப்பும் நேர்த்தியாக உள்ளது. தொடருங்கள் உங்கள் நற்பணியை. நிச்சயம் பெரும் வெற்றியடைவீர்கள். வாழ்த்துக்கள் பொறியாளர் அமிர்த கணேஷ் அவர்களே. Find sponsors to productize your inventions. Best of luck.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
18-பிப்-202005:08:17 IST Report Abuse
Ray கார்போரேட்டுகள் முந்திக் கொண்டு காப்புரிமை வாங்கி விடுவார்கள் கண்டு பிடித்தவர்கள் மூலிகை பெட்ரோல் ராமர் போல வழக்கில் சிக்கி சிறைக்கு போகலாம் உஷார் உஷார் அந்த பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும் கல்லூரி பேராசிரியர்கள் வழிகாட்டலாம்
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
16-பிப்-202013:04:35 IST Report Abuse
Mano சூப்பரான கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X