கணவனுடன் கருத்து வேறுபாடு பெண் தீக்குளித்து தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனுடன் கருத்து வேறுபாடு பெண் தீக்குளித்து தற்கொலை

Added : பிப் 12, 2020
Share
ஆனைமலை : ஆனைமலை அடுத்த தாத்துாரில், மனவிரக்தியில் உடலில் டீசல் ஊற்றி, பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 27; ஆனைமலை அடுத்த தாத்துாரில், தனியார் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா, 21. இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அடிக்கடி

ஆனைமலை : ஆனைமலை அடுத்த தாத்துாரில், மனவிரக்தியில் உடலில் டீசல் ஊற்றி, பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 27; ஆனைமலை அடுத்த தாத்துாரில், தனியார் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா, 21. இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, ராஜா அருகில் தோட்டத்துக்கு சென்றிருந்த போது, வீட்டில் இருந்த, டீசல் உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்து, கவுசல்யா தற்கொலை செய்து கொண்டார்.அருகில் உள்ளவர்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆனதால், பொள்ளாச்சி சப் - கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கவுசல்யா முதல் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர். ராஜாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். இவர், கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. உடல்கூராய்வு அறிக்கை வந்தால் தான் உறுதியான தகவல் தெரியும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X