சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அக்காவின் காதலனை கொலை செய்த தம்பி கைது

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 அக்காவின் காதலனை கொலை செய்த தம்பி கைது

கிணத்துக்கடவு: சகோதரியின் காதலனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை, போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்த, முத்துசாமியின் மகன் மணிகண்டன், 20; ஆட்டோ டிரைவர். கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த, கனகராஜ் என்பவரின் மகன், தினேஷ்குமார், 22. உறவுமுறையில், சகோதரரான இவருக்கும், மணிகண்டனின் மூத்த சகோதரிக்கும் காதல் ஏற்பட்டது. இதை, மணிகண்டன் கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் சகோதரியுடன், தினேஷ்குமார் பழகுவதை கைவிட வேண்டுமென, மணிகண்டன் பேசியுள்ளார்.அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், மறைத்து வைத்திருந்த கத்தியால், தினேஷ்குமாரை குத்தி, கொலை செய்தார்.கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nethiadi - Thiruvarur,இந்தியா
16-பிப்-202017:17:00 IST Report Abuse
Nethiadi எல்லாம் மூர்க்க மதத்தின் வழிபாடு தான்,அவர்களுக்கு கற்று கொடுத்த மதம் அவர்கள் செய்கின்றார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X