பொது செய்தி

தமிழ்நாடு

உதவி தொகை வரவில்லையா? வேளாண் துறை அறிவுறுத்தல்

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : மத்திய அரசு பிரதம மந்திரி விவசாயிகள் உதவி தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தில், ஒரு விவசாயிக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை, மூன்றாக பிரிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, மூன்று சுற்று தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சுற்றில், சில விவசாயிகளுக்கு தொகை வந்து சேரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு வட்டாரத்தில் மூன்றாவது சுற்று உதவித் தொகை வராத விவசாயிகள், ஆதார் நகல் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்துடன் தெற்கு வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகலாம்.

புதிதாக விண்ணப்பிக்க விவசாயிகள் உதவித் தொகைக்கு, இது வரை விண்ணப்பிக்காத தெற்கு வட்டார விவசாயிகள், இப்போது விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, சிட்டா மற்றும் வங்கி பாஸ் புத்தகத்துடன் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.குடும்பத்தில் யாராவது அரசு வேலையில் இருந்தாலோ, ஓய்வூதியம் பெற்று வந்தாலோ, வருமான வரி கட்டும் அளவு வருவாய் இருந்தாலோ இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X