சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., பாசன நீர் குளறுபடி விவசாயிகள் நலச்சங்கம் புகார்

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை : பி.ஏ.பி.,பாசன நிலங்களுக்கு, சுற்றுக்கு 14 நாட்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்க வேண்டும், என ஊராட்சிகளில் நடந்த கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பி.ஏ.பி., விவசாயிகள் நல சங்க பொருளாளர் விஜயசேகரன் கூறியதாவது :பி.ஏ.பி., முதல் மண்டல பாசன நிலங்களுக்கு, திட்ட விதிகளின் படி, புன் செய் சாகுபடி செய்வதற்கு ஏற்ப, ஒரு சுற்றுக்கு 14 நாட்கள், அதில், ஏழு நாள் பாசனம்; ஏழு நாள் அடைப்பு என்ற அடிப்படையில் பாசன நீர் வினியோகம் செய்ய வேண்டும்.ஆனால், பயிர் சாகுபடி செய்ய முடியாத அளவிற்கு, மாதம் ஒரு சுற்று என்ற அடிப்படையில் வினியோகம் செய்யப்படுகிறது. தொகுப்பு அணைகளில் நீர் இருந்தும், 7,600 மில்லியன் கன அடி நீர் மட்டுமே வழங்கப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு வழங்க வேண்டிய நீரை, ஆழியாற்றில் நுாற்றுக்கணக்கான பம்ப்செட்கள் அமைத்து உறிஞ்சப்படும் நீரை ஈடு செய்வதற்காக ஆழியாறு அணைக்கு திருப்பி விடாமல் இருக்க வேண்டும்.

கால்வாய்களில் சமச்சீரான அளவு தண்ணீர் வழங்கவும், பயிர் சாகுபடி குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, வள்ளியரச்சல், பரஞ்சேர்வழி, ஆலாம்பாடி, பழைய கோட்டை, நத்தக்காடையூர், அந்தியூர், ஆர்.வேலுார், பூலாங்கிணர் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X