சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பை தேர்வு அறிவிப்பு தாமதம்?

Added : பிப் 12, 2020
Advertisement

உடுமலை : தனிநபர், குழு விளையாட்டு போட்டியை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டி, தமிழக அரசால் நடத்தப்படுகிறது.

முதலிடத்தை பெறும் வீரர், வீராங்கனை அல்லது அணிக்கு ஒரு லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும். வழக்கமாக ஜன., இறுதிக்குள் மாவட்ட போட்டி நடத்தி முடிக்கப்படும்.இந்த போட்டியில், பெரும்பாலும், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரே அதிகளவில் பங்கேற்கின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடந்து வருவதால் இன்னும் மாவட்ட போட்டியே நடத்தி முடிக்கவில்லை.அடுத்த வாரம் திருப்புதல் தேர்வும், தொடர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. இன்னும் மாவட்ட அளவிலான போட்டிகளே முடியாத சூழலில், மாநில போட்டி தேதி வெளியாவதில், தாமதம்ஏற்பட்டுள்ளது.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X