பொது செய்தி

தமிழ்நாடு

சுய உதவிக்குழு வணிகம் சுறுசுறுப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், மகளிர் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட சுய உதவிக்குழு பெட்டி கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய மகளிர் திட்டம் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், முக்கிய இடங்களில், மகளிர் பெட்டிக் கடைகள் அமைத்து தரும் திட்டம் கடந்தாண்டு துவங்கப்பட்டது.துவக்கத்தில், சொற்பமான பெட்டிக்கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டு, அவற்றில், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சில்லறை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

துவக்கத்தில், மகளிர் குழுக்கள் பெட்டிக்கடைகளை நடத்த பெரிய ஆர்வம் காட்டவில்லை. அதன் பின், டீ, காபி, வடை, பஜ்ஜி, போண்டா, கலவை சாதம் விற்பதற்கு அனுமதி வழங்கப் பட்டதால், ஓரிரு குழுக்கள் கடையை எடுத்து நடத்தின.ஒன்றிய அலுவலகம் முன், கோவை ரோடு, வடக்கிபாளையம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் பெட்டிகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.பெரும்பாலான மகளிர் பெட்டிகள், தரமான உணவு விற்பனை செய்து நேர்மையாக செயல்படும் நிலையில், கடை அமைத்த சில மாதங்களிலேயே சில பெட்டிகளில் அனுமதிக்கப்படாத பொருட்களை விற்க துவங்கியுள்ளனர்.

துவக்கத்திலேயே இது போன்ற அத்துமீறல்களை ஆய்வு செய்து அதிகாரிகள் கட்டுப் படுத்தினால், எதிர்காலத்தில் ஆவின் பாலகங்கள் போன்ற பொது இடத்தை ஆக்கிரமித்து, விதிகளை காற்றில் பறக்க விடுவதை தடுக்கலாம்.மகளிர் திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'மகளிர் குழுக்களுக்கு பெட்டி அமைக்கவும், வியாபாரம் தொடங்கவும், தொடர்ந்து நடத்தவும் முதலீட்டுத்தொகை, பராமரிப்புத் தொகை என ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

கடையின் வரவு, செலவுகளை முறையாக பராமரித்து, அதிலிருந்து 20 சதவீத தொகையை வாடகை மற்றும் பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் அரசுக்கு செலுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பெட்டியை தவிர, கூடுதல் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X