கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நர்ஸ் பலாத்கார கொலை இரண்டு பேருக்கு துாக்கு

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (5)
Advertisement
 நர்ஸ் பலாத்கார கொலை இரண்டு பேருக்கு துாக்கு

திருநெல்வேலி: நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு துாக்கு தண்டனை விதித்து, திருநெல்வேலி மகளிர் கோர்ட் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பெண், வைராவிகுளம் அரசு மருத்துவமனையில், நர்ஸ் ஆக பணியாற்றினார். கணவர் இறந்து விட்டார். மகன், கோவையில் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்தார்.கடந்த, 2008 செப்., 29ல், நர்ஸ் வீட்டின் மாடியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி, கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்து, 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கில், கல்லிடைகுறிச்சி, ராஜேஷ் கண்ணன், 42, அயன் சிங்கம்பட்டி, வசந்தகுமார் 48, உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.ராஜேஷ்கண்ணன், வசந்தகுமார் இருவருக்கும், அத்துமீறி நுழைந்ததற்காக ஆயுள் தண்டனை, பாலியல் பலாத்காரத்திற்கு, 10 ஆண்டு, கொலை செய்ததற்கு துாக்கு தண்டனை விதித்து, நீதிபதி இந்திராணி நேற்று தீர்ப்பளித்தார். மற்ற நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-பிப்-202004:50:44 IST Report Abuse
 nicolethomson தமிழக நீதித்துறை பல்லிலுக்குதா அல்லது செயல்பாடுதா என்று பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
15-பிப்-202018:55:23 IST Report Abuse
Abdul Rahman அதுக்குத்தான் பல இடங்கள் உள்ளதே. அங்கே போய் தொலைக்க வேண்டியதுதானே.
Rate this:
Share this comment
Cancel
வாடகைபாக்கி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
14-பிப்-202014:58:34 IST Report Abuse
வாடகைபாக்கி  சொடலை டெல்லி குற்றவாளிகளிடமிருந்து டிப்ஸ் வாங்கிக்கோங்க பிரெண்ட்ஸ்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X