பொது செய்தி

தமிழ்நாடு

'அனைவருக்கும் உதவி செய்வதே அரசின் நோக்கம்'

Added : பிப் 12, 2020
Advertisement

பந்தலுார் : 'அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருவது அரசின் நோக்கமாக உள்ளது,' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

பந்தலுார் அருகே, அம்மன் காவு அரசு துவக்கப்பள்ளியில் மனுநீதி நாள் கூட்டம் நடந்தது. தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது: சேரங்கோடு ஊராட்சியில், 800 பசுமை வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில், மாநில அரசு மற்றும் 'ரெப்கோ' நிறுவனத்தின் மூலம் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக, 70 வீடுகள் காரைக்கொல்லி பகுதியில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகளிர் குழுக்களுக்கு, 185 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்று பாதிக்க கூடாது. கடனை திரும்ப செலுத்த முடியாவிட்டாலும், மீண்டும் அந்த குழுவிற்கு கடன் கொடுத்து, பழைய கடனை பிடித்தம் செய்து மீதி பணத்தை கொண்டு தொழில் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மழையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கூடலுார்; பந்தலூர் பகுதியில் மட்டும், 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ள பட்டுள்ளதால், மக்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு இன்னசென்ட் திவயா பேசினார்.தொடர்ந்து, கூடலுார் எம்.எல்.ஏ., திராவிடமணி, மகளிர் திட்ட அலுவலர் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பலர் பேசினர். முகாமில், 700 மனுக்கள் பெறப்பட்டது. 109 பயனாளிகளுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர் காமு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X