பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கு கிரிக்கெட் கிளப் வெற்றி

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை : மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டியில், கொங்கு கிரிக்கெட் கிளப் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'காசா கிராண்ட்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது.* பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த போட்டியில், டேவில் ஸ்டோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, கொங்கு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டேவில் ஸ்டோக்கர்ஸ் அணி, 48 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 126 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய கொங்கு சி.சி., அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 27.1 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 130 ரன் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.* சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த ஐந்தாம் டிவிஷன் 'லீக்' போட்டியில், ஜி கிரிக்கெட் கிளப் அணி, எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஜி.சி.சி., அணி, 50 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 224 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய எக்கர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 46.1 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 225 ரன் எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக யோகேஷ்வரன் 44 ரன் எடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X