பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

Added : பிப் 12, 2020
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி கட்டுப்பட்டு அரசு உயர்நிலை பள்ளி மற்றும் குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு இடையே, பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதீன் அறிவுரைப்படி, குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 20 பேர், ஆங்கில ஆசிரியை மல்லிகை குமார் தலைமையில், கட்டபெட்டு பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். உதவி தலைமையாசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.இருபள்ளியில் தேர்வு செய்யப்பட்ட, 40 மாணவர்கள் அறிமுகம் செய்து கொண்டதோடு, ஓவிய ஆசிரியர் டிக்சன் ராஜ் முன்னிலையில், ஸ்மார்ட் வகுப்பு, ஆய்வகம், தனித்திறன் மற்றும் வரைபடம் உள்ளிட்ட, நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

பின்பு, கள பயணமாக, 'இன்கோ' தேயிலை தொழிற்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள், தேயிலை உற்பத்தி குறித்து தெரிந்து கொண்டனர்.தொடர்ந்து, கட்டபெட்டு அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆசிரியை ஜானகி தலைமையில், குண்டாடா பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் முன்னிலையில், மரக்கன்று நடவு செய்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்பட்டது.மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு, பண்ணை தொழில், நூலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம், போட்டி தேர்வு ஆகியவை குறித்து தெரிந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி மூலம், மாணவர்கள் நட்புண்ர்வு, சகோதரத்துவம், புதிய சூழல், மாறுபட்ட பண்பாடு, ஒற்றுமை ஆகியவை குறித்து விழிப்புணர்வு அடைந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வளமைய பயிற்றுனர் வெங்கடேஷ், பி.டி.ஏ., தலைவர் மணிகண்டன் உட்பட, இரு பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X