அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரஜினி பற்றிய பேச்சுக்கு இடமில்லை; அ.தி.மு.க., கூட்டணி தொடரும்': ராமதாஸ்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 'ரஜினி பற்றிய பேச்சுக்கு இடமில்லை;  அ.தி.மு.க., கூட்டணி தொடரும்': ராமதாஸ்

சென்னை: ''நடிகர் ரஜினி கட்சி பற்றிய பேச்சுக்கு இடமில்லை; அ.தி.மு.க., கூட்டணியில் தொடருவோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வு முறைகேடு குறித்த விசாரணை, சரியான திசையில் செல்கிறது. அறிவு பஞ்சம்இனிவரும் காலங்களில், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை சரியான திசையில் செல்வதால், அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருக்காது.டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது, தேர்தலுக்கான மாற்றம். அறிவு பஞ்சம் இருப்பதன் காரணமாக, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை, பணம் கொடுத்து, தி.மு.க., வாங்கிஇருக்கிறது. அறிவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு வறட்சியை சரி செய்து, எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, பிரசாந்த் கிஷோர் அழைக்கப்பட்டுள்ளார்.

கோரிக்கைகள்

அ.தி.மு.க., கூட்டணி யில் இணையும்போது, நாங்கள், 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில், காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு உள்பட, ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது வரை, அ.தி.மு.க., கூட்டணி யில் தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலிலும், இதே கூட்டணியில் நீடிப்போம். வரும் காலங்களிலும், அ.தி.மு.க., கூட்டணியில் தொடருவோம். ரஜினி கட்சி பற்றிய பேச்சுக்கு இடமில்லை.இவ்வாறு, ராமதாஸ் கூறினார்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதைபா.ம.க., வெளியிட்ட நிழல் பொது பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள்:
தமிழகத்தில், ஐ.ஐ.டி.,க்கு இணையான, தொழில்நுட்ப கல்வி நிறுவனம், 5 இடங்களில், ஏற்படுத்தப்படும். மகளிர் கல்லுாரிகள், 10 மாவட்டங்களில் துவக்கப்படும்

தஞ்சாவூர், நெல்லை, தர்மபுரி, வேலுார் ஆகிய நகரங்களில், முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். வேலை இல்லாமல் தவிக்கும் படித்த இளைஞர்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்

வரும், 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரியாக நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு வழங்கப்படும். 12 லட்சம் மக்கள் தொகைக்கு, ஒன்று என்ற அளவில், மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும்

ஒருதலை காதல் என்ற பெயரில், பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதை தடுக்க, தனி போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்படும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை, கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைப்பது உறுதி செய்யப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும். முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இருங்கடா - Kitchener,கனடா
13-பிப்-202022:39:10 IST Report Abuse
இருங்கடா நீ எல்லாம் இன்னும் வெள்ளையும் சொள்ளையுமா தான் சுத்திக்கிட்டு இருக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X