திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம்' முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உறுதி

Added : பிப் 12, 2020
Share

ஊட்டி : 'கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,' என, முதல் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உறுதியளித்தனர்.

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில், மொத்தம், 22 வார்டுகளை உள்ளடக்கி, 13 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கு பின், ஊட்டி ஒன்றியத்தின் முதல் கூட்டம் நடந்தது. தலைவர் மாதன் தலைமை வகித்தார். பி. டி. ஓ., ரமேஷ் கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.முன்னதாக, முதல் கூட்டம் என்பதால் வார்டு கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் ஆய்வு செய்து, வார்டுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து தலைவரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, ' ஒன்றியத்தில் உள்ள, 22 வார்டுகளில் மட்கும் குப்பை;மட்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும்; அந்த குப்பைகளை உரிய இடத்தில் சேகரித்து எவ்வித சுகாதார சீர்கேடு இல்லாமல் அதை இயற்கை உரத்திற்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர்.வளர்ச்சி பணிகள் குறித்து அறிக்கை அனுப்பு நிதி பெற்று விரைவில் பணிகள் துவக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X