அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும்: பிரேமலதா பேச்சு

Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: ''விஜயகாந்தை போன்று, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேசினார்.

சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், 118 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பத்தில், கட்சி கொடியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று ஏற்றி வைத்தார்.

ரேஷன் பொருட்கள்விழாவில், பிரேமலதா பேசியதாவது:எத்தனையோ மாநிலத்தில், யார் யாரோ முதல்வராக வருகின்றனர். அவ்வாறு முதல்வராக வருபவர்கள் எல்லாம், விஜயகாந்தின் கொள்கையை பயன்படுத்துகின்றனர். ரேஷன் பொருட்கள், வீடு தேடி வரும் என்ற அறிவிப்பை, முதல் தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டவர், விஜயகாந்த். அதை, இப்போது செயல்படுத்தி, ஜெகன்மோகன் ரெட்டி சிறப்பான முதல்வர் என, ஆந்திராவில் பெயர் எடுத்துஉள்ளார்.

மூன்றாவது முறையாக, டில்லி முதல்வராக கெஜ்ரிவால் பொறுப்பேற்று உள்ளார்.'லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி' என, விஜயகாந்த் சொன்ன, அந்த வார்த்தையை பயன்படுத்தி, கெஜ்ரிவாலும் முதல்வராகியுள்ளார்.மாற்றி இருப்பார்எனவே, தமிழக மக்களுக்கு உழைக்க, சிறந்த ஆட்சியை வழங்குவதற்கு, விஜயகாந்த் தயாராக இருக்கிறார்.

மற்ற மாநிலங்களில், அவரது, 'பாலிசி'யை பயன்படுத்துகின்றனர்; அதை, நாம் பாராட்டுகிறோம். விஜயகாந்திற்கு வாய்ப்பு வழங்கி இருந்தால், ஒரு லட்சம் வாக்குறுதி களை கொடுத்து, அத்தனையும் நிறைவேற்றி, தமிழகத்தை முதன்மை மாநிலமாக, மாற்றி இருப்பார். அதை தவறவிடுவது, தமிழர்களும், தமிழகமும் தான். ஜாதி, மதம், மொழி என கூறி மக்களை, அரசி யல் கட்சிகள் துாண்டுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு வாழ்பவர், விஜயகாந்த். கூட்டணி என்பதால், குட்ட குட்ட குனியும் ஜாதியில்லை; நிமிர்ந்து நின்று கேட்போம் என்று, நான் கூறினேன்.கூட்டணி தர்மத்தை, விஜயகாந்த் என்றைக்கும் கடைபிடிப்பார்.

உள்ளாட்சி தேர்தல்
அதேபோன்று, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான், அவ்வாறு கூறினேன். கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காவிட்டால், அது கூடா அணியாக மாறி விடும். எதிர் கூடாரத்திற்கு அதிக ஓட்டுக்களை தந்து, அதிக இடங்களில் வெற்றி பெற செய்து விடும். விரைவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கு, தே.மு.தி.க.,வினர் உழைக்க வேண்டும்.இவ்வாறு, பிரேமலதா பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
13-பிப்-202017:09:05 IST Report Abuse
Baskar யக்கா நீ வாத்து போல் எதையும் கத்தாமல் இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X