அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மகளிர் அணி கோரிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement

சென்னை: 'உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து, இடஒதுக்கீடு தொடர்பான சீராய்வு மனுவை, மத்திய அரசு தாக்கல் செய்து, சமூக நீதியை காக்க வேண்டும்' என, தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க., மகளிர் அணி, தொண்டர் அணி, பிரசாரக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், மாநில செயலர் கனிமொழி தலைமையில், நேற்று நடந்தது. விஜயா தாயன்பன், காஞ்சனா கமலநாதன், ஹெலன் டேவிட்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.தீர்மானங்கள் விபரம்:புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு கைவிட வேண்டும்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, சீராய்வு மனுவை, மத்திய அரசு தாக்கல் செய்து, சமூக நீதியை காக்க வேண்டும். 'குரூப் - 4' தேர்வில், ஊழல் புரிந்தோர் யாராக இருப்பினும், உடனே விசாரணை செய்து, அவர்களுக்கு சட்டப்படியான தண்டனை பெற்றுத் தர வேண்டும்இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X