ஏ.ஜி.எஸ்., நிறுவன அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்: ஒரு மணி நேரம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.ஜி.எஸ்., நிறுவன அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்: ஒரு மணி நேரம் விசாரணை

Added : பிப் 12, 2020
Share
சென்னை: சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, ஏ.ஜி.எஸ்., சினிமா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, நேற்று வருமான வரி அதிகாரிகள் முன் ஆஜராகி, ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார்.மதுரையைச் சேர்ந்த, 'பைனான்சியர்' அன்புச்செழியன் மீதான வருமான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது. அப்போது,

சென்னை: சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து, ஏ.ஜி.எஸ்., சினிமா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, நேற்று வருமான வரி அதிகாரிகள் முன் ஆஜராகி, ஒரு மணி நேரம் விளக்கம் அளித்தார்.

மதுரையைச் சேர்ந்த, 'பைனான்சியர்' அன்புச்செழியன் மீதான வருமான வரி ஏய்ப்பு புகாரில், சென்னை, மதுரையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில், நான்கு நாட்கள் சோதனை நடந்தது. அப்போது, பிகில் பட வசூல் தொடர்பாக, பல்வேறு ஆவணங்கள் சிக்கின.அதன்படி, அந்த படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவன உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகங்களில், அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பிகில் படத்திற்காக பெறப்பட்ட சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து, நடிகர் விஜயிடமும், மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தினர். 24 மணி நேரம் நடந்த சோதனையில், விஜய் வீட்டிலிருந்து, ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகங்களில் இருந்தும், கணக்கில் காட்டப்படாத, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக, மூன்று நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க, வருமான வரித் துறை, அவருக்கு, 'சம்மன்' அனுப்பியிருந்தது.அதன்படி, நேற்று காலை, ஏ.ஜி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் சார்பில் ஆடிட்டர்கள், நேற்றும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஆனால், விஜய் மற்றும் அன்புச்செழியன் ஆஜராகவில்லை. மூன்று நாட்கள் முடிந்த பின், மீண்டும், சம்மன் அனுப்புவதா அல்லது சில நாட்கள் காத்திருப்பதா என்பது குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும்.ஏ.ஜி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா ஆஜர்ஆனார். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X