பொது செய்தி

தமிழ்நாடு

துவரை மகசூல் 'துாள்' விவசாயிகள் மகிழ்ச்சி

Added : பிப் 12, 2020
Advertisement
 துவரை மகசூல் 'துாள்' விவசாயிகள் மகிழ்ச்சி

பேரூர் : கடந்த ஆண்டு பெய்த பருவமழைகள் காரணமாக, மானாவாரி நிலங்களில் துவரை மகசூல் அதிகரித்துள்ளது. அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.

தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரகிராமங்களில் நிலக்கடலை, சோளம், அவரை, துவரை உள்ளிட்ட மானாவாரி பயிர் சாகுபடி, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.கடந்த ஆடி பட்டத்தில் கரடிமடை, குப்பனுார், வடிவேலாம்பாளையம், மோளப்பாளையம், முகாசி மங்கலம், காளிமங்கலம், தேவராயபுரம், விராலியூர் கிராமங்களில்,துவரை சாகுபடி செய்யப்பட்டது. அச்சமயங்களில் பருவமழைகள் கை கொடுத்ததால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்து உள்ளது.

தற்போது, அறுவடை பணி நடந்து வருகிறது. கிலோ, ரூ. 50 - 60க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'தொடர் மழையால், துவரை விளைச்சல் அதிகரித்து. விலையும் ஓரளவுக்கு கட்டுப்படியாகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறையால், அறுவடை தாமதமாக நடந்து வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X