கூடலுார் : கூடலுார், கோத்தர்வயல் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை எதிர்தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்; அதனை மீட்டு தரும்படி, கோத்தர் இனத்தை சேர்ந்த பார்வதி என்பவர் வருவாய் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், 'அந்த இடம், 20 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் உறவினர் தங்களுக்கு எழுதி கொடுத்தனர்,'என, எதிர்தரப்பினர் தெரிவித்தனர். இதனால், நேற்று இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. எஸ்.ஐ., கார்த்திக்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்து, அவர்களை, சம்பந்தப்படுத்தி, விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் வரும்படி கூறி சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE