பொது செய்தி

தமிழ்நாடு

நாங்களும் சாதிச்சு காட்டுவோம்! டேபிள் டென்னிசில் குட்டீஸ் நிரூபணம்

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை : மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், நரேஷ் மற்றும் ஸ்ரீநிவி மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தினர்.

கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் அசோசியேஷன் சார்பில், ஐந்தாம் கட்ட மாவட்ட அளவிலான 'ரேங்கிங்' போட்டி பீளமேடு, பாரதிகாலனி பகுதியில் நடந்தது.'மினி கேடட்', 'கேடட்', சப்- ஜூனியர், ஜூனியர், யூத் பாய்ஸ், ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளிலிருந்து, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மாணவர் பிரிவு'மினி கேடட்' பிரிவில் ரேஜிஸ், 3-1 என்ற செட் கணக்கில், ரேயான்னையும்; 'கேடட்' பிரிவில், இலக்கியன், 3-0 என்ற செட் கணக்கில், விஷ்ணுவையும்; சப்- ஜூனியர் பிரிவில், நரேஷ், 3-0 என்ற செட் கணக்கில், அபிஷேக்கையும்; ஜூனியர் பிரிவில், நரேஷ், 3-1 என்ற செட் கணக்கில், லட்சுமணனையும்; 'யூத் பாய்ஸ்' பிரிவில், நரேஷ், 3-1 என்ற செட் கணக்கில், அபிஷேக்கையும்; ஆண்கள் பிரிவில், அருண், 3-0 என்ற செட் கணக்கில், அருண் ரோஷனையும் வென்றனர்.

மாணவியர் பிரிவு'மினி கேடட்' பிரிவில்லக் ஷனா, 3-0 என்ற செட் கணக்கில், கவியாஸையும்; 'கேடட்' பிரிவில், சம்யுக்தா 3-1 என்ற செட் கணக்கில், ஆருத்ராவையும்; சப்- ஜூனியர் பிரிவில், விசாலாட்சி, 3-1 என்ற செட் கணக்கில், தமிழ் இலக்கியாவையும்; ஜூனியர் 'யூத் கேர்ள்ஸ்' மற்றும் பெண்கள் பிரிவில், ஸ்ரீநிவி, 3-1 என்ற செட் கணக்கில், கீர்த்தனாவையும் வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X