பொது செய்தி

தமிழ்நாடு

திடீர் மாற்றம்! 24 ஆயிரம் சிலிண்டர் பதிவு தனியாருக்கு...வினியோக குளறுபடி வந்தால் நடவடிக்கை

Added : பிப் 12, 2020
Advertisement

ஊட்டி : ஊட்டியில், அரசு சார்ந்த நிறுவனத்தில் இருந்த, 24 ஆயிரம் சிலிண்டருக்கான, நுகர்வோர் பதிவு, திடீரென தனியார் ஏஜன்சிக்கு மாற்றப்பட்டதால், உள்ளூர் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஊட்டியில், தமிழ்நாடு அரசு வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது. அதில், அரசு உத்தரவுக்கு இணங்க, 1988 ம் ஆண்டு முதல், நுகர்வோருக்கு சமையல் 'சிலிண்டர்' சப்ளை செய்யப்பட்டு வந்தது. துவக்கத்தில், 2000 நுகர்வோர் அதில் பதிவு செய்து இருந்தனர்.தற்போது, 24 ஆயிரம் நுகர்வோர் பதிவு செய்துள்ளனர். கடந்த, 32 ஆண்டுகளாக, ஊட்டி நகரில் சிறந்த முறையில், சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், தற்போது, திடீரென ஒரு தனியார் ஏஜன்சிக்கு சிலிண்டர் சப்ளை வினியோகஸ்தருக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி, நுகர்வோருக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல், கடந்த,பிப், 7ம் தேதி முதல், தமிழ்நாடு வாணிப கழகத்தில் இருந்த, 24 ஆயிரம் நுகர்வோர் பதிவு, தனியார் ஏஜன்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்பு, இந்த மாற்றம் குறித்த தகவல், நுகர்வோர் மொபைல் போனுக்கு வந்துள்ளது. இதனால், ஊட்டியில் நுகர்வோர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.நுகர்வோர் சிலர் கூறுகையில்,'தமிழ்நாடு அரசு வாணிப கழகம் கடந்த, 32 ஆண்டுகளாக எந்தவித குளறுபடி இல்லாமல் சிலிண்டர் வினியோகித்தது.

குடோன் ஊட்டியில் இருந்ததால், அவசர காலங்களில், அங்கு சென்று சிலிண்டர் எடுத்து வந்தோம். தற்போது, தனியார் ஏஜன்சிக்கு சிலிண்டர் வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகே தூனேரி கிராமத்தில் குடோன் உள்ளது. இதனால், அவசர காலத்தில் சிக்கல் ஏற்படும். மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.கலெக்டர் எச்சரிக்கை!நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''அரசு சார்ந்த நிறுவனத்தில் இருந்த, 24 ஆயிரம் சிலிண்டர் நுகர்வோரின் பதிவு, திடீரென தனியார் ஏஜன்சிக்கு மாற்றப்பட்டது குறித்து புகார்கள் வந்தது. ஏஜன்சி மாற்றத்தால், மக்களுக்கான வினியோகத்தில் குளறுபடி வந்தால், மீண்டும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X