பொது செய்தி

தமிழ்நாடு

ஜீன்பூல் சுற்றுலா மையம் திறப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

கூடலுார் : கூடலுார் நாடுகாணியில், கடந்த மழையின் காரணமாக, கடந்த ஆண்டு மூடப்பட்ட ஜீன் பூல் சுழல் சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்பட்டது.

கூடலுார் நாடுகாணியில் தாவர ஆராய்ச்சிக்காக, 500 ஏக்கர் பரப்பில் ஜீன்பூல் தாவர மையம் அமைக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த, தாவர ஆராய்ச்சியாளர்கள் பலர் பணியிலிருந்து சென்று விட்டனர். நிதி பிரச்னையால், அனைத்து பணிகளும் நிறுத்தபட்டது.இந்நிலையில், கடந்த ஆண்டு சூழல் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டு, ஜூன் மாதம் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இங்கு, பழங்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கபட்டது.

கடந்த ஆண்டு ஆக., மாதம் பெய்த மழையின் போது, கேரளா நிலம்பூர் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை இன்றி இம்மையம் மூடப்பட்டது.சாலை, சீரமைத்து ஆக., மாதம் வாகன போக்குவரத்து துவங்கியது. ஆனால், இம்மையம், சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட வில்லை.இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆறு மாத இடைவெளிக்கு பின், இம்மையம் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக, மீண்டும் திறக்கப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில்,'தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மையம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது. கடும் வறட்சி துவங்கி உள்ளதால், தீ ஏற்பட கூடிய பொருள்களை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மையம் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X