மேற்கு புறவழிச்சாலை சுறுசுறுப்பு விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு புறவழிச்சாலை சுறுசுறுப்பு விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு

Added : பிப் 12, 2020
Share

கோவை : மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் கீழ் நான்கு கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.

கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண, 32.43 கி.மீ., நீளத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.நிலம் கையகப்படுத்த, 320 கோடி ரூபாயும், ரோடு அமைக்க 505 கோடி ரூபாய் உட்பட, 825 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்த, 355.5 ஏக்கர் நிலம், 16 கிராமங்களில் கையகப்படுத்த வேண்டும். 12 கிராமங்களில் நில உரிமையாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்பு பணிகள் முடிந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பன்னிமடை மற்றும் மதுக்கரை பகுதிகளை சேர்ந்தவர் களுக்கும், நேற்று கூடலுார் தெற்கு மற்றும் சுண்டக்காமுத்துார் பகுதியை சேர்ந்தவர்களுக்கும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.இரண்டு நாட்கள் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், நில உரிமையாளர்கள், பொதுமக்களிடம் இருந்து, 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ள தாகவும், இம்மனுக்கள் பரிசீலனை செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் சமர்ப்பிக்கவுள்ள தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X