புலிகள் காப்பகத்தில் சம்பளம் இல்லாத வேலை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் சம்பளம் இல்லாத வேலை

Added : பிப் 12, 2020
Share
பந்தலுார் : முதுமலை புலிகள் காப்பகத்தில், பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்; கூடலுார் கோட்டத்தில் பணிபுரியும் யானை கண்காணிப்பு குழுவினருக்கு சம்பளம் வழங்கவில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் வேட்டை தடுப்பு காவலர்களின் பணி, முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. வேட்டை சம்பவங்கள், வனக்குற்றங்களை கண்காணிப்பதில் அதிக

பந்தலுார் : முதுமலை புலிகள் காப்பகத்தில், பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்; கூடலுார் கோட்டத்தில் பணிபுரியும் யானை கண்காணிப்பு குழுவினருக்கு சம்பளம் வழங்கவில்லை.
முதுமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் வேட்டை தடுப்பு காவலர்களின் பணி, முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. வேட்டை சம்பவங்கள், வனக்குற்றங்களை கண்காணிப்பதில் அதிக சிரத்தையுடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதம் வழங்க வேண்டிய சம்பளம் இதுவரை வழங்காத நிலையில், தினசரி பண தேவைகளுக்கும், குடும்ப தேவைகளுக்கும் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாட தலா, 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகையும், நடப்பாண்டு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. வேறு எந்த பண பலன்களும் இல்லாமல், மாதந்தோறும் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ள இவர்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து உயரதிகாரிகள் கண்டுக்கொள்ள வில்லை.அண்மையில் முதுமலைக்கு வந்த வனத்துறை அமைச்சரிடமும், இந்த தகவல் தெரிவித்த போது, நடவடிக்கை இல்லை. இதேபோல், கூடலுார் வனக்கோட்டத்தில் யானை கண்காணிப்பு குழுவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காததுடன், மாநில அரசு உயர்த்திய சம்பளமும் வழங்காமல் உள்ளனர்.

இதனால் தினசரி கடன் வாங்கியும், வட்டிக்காரர்களிடம் கையேந்தியும் மன உளைச்சலுடன் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, வனத்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X