அதிகரிக்கும் விபத்துகள் வேகத்தடை அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் விபத்துகள் வேகத்தடை அவசியம்

Added : பிப் 12, 2020
Share

பந்தலுார் : பந்தலுார் அருகே, சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் கைவட்டா பகுதியில் தொடரும் வாகன விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.

கூடலுாரில் இருந்து தேவர்சோலை, முக்கட்டி வழியாக சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் கைவட்டா பகுதி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கிராமங்களுக்கு, கிராம சாலைகள் பிரிந்து செல்வதுடன், வளைவான நெடுஞ்சாலையை கொண்ட பகுதியாகவும் அமைந்துள்ளது.இங்கு தமிழக கேரளா இணைப்பு சாலை இருப்பதால், 24- மணி நேரமும் வாகனங்கள் வந்து செல்லும்.

இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்களை தடுக்க வேகத் தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X