சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி 'ஜிம்கானா கிளப்' மைதானத்தில் புலி

Added : பிப் 12, 2020
Advertisement
 ஊட்டி 'ஜிம்கானா கிளப்'  மைதானத்தில் புலி

ஊட்டி : ஊட்டி 'ஜிம்கானா கிளப்' மைதானத்தில், நேற்று புலி நடமாடியதால், மூன்று நாட்களுக்கு மைதானத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி, 'ஜிம்கானா கிளப்' மைதானம், 100 ஏக்கர் பரப்பில் உள்ளது. தற்போது, தேசிய மற்றும் மாநில அளவில், 1,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். காலை, மாலை நேரங்களில் பலர், 'கால்ப்' பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள சிலர் சென்றபோது, ஒரு புலி அப்பகுதியில் நடமாடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.ஊட்டி ஜிம்கானா கிளப் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., குண்டன் கூறுகையில்,''புலி நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு மைதானத்தில் உறுப்பினர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

நீலகிரி உதவி வனப்பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,''அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், கால்ப் கிளப் சாலையில், நடை பயிற்சி செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். வனத்துறை உத்தரவுக்கு பின், மீண்டும் கால்ப் பயிற்சிக்கு செல்வது பாதுகாப்பானது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X