பொது செய்தி

தமிழ்நாடு

'காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்'

Added : பிப் 12, 2020
Advertisement

பந்தலுார் : 'வனங்களில் காட்டுத்தீ பரவுவதை கட்டுப்படுத்த, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்,' என, அறிவுறுத்தப்பட்டது.

பந்தலுார் அருகே, பிதர்காடு வனச்சரகம் சார்பில், சேலக்குன்னா, பிதர்காடு, ஓடோடம் வயல், கொட்டாடு உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.அதில், வனச்சரகர் மனோகரன் பங்கேற்று பேசியதாவது:தாவரங்களின் போர்வையாக காணப்படும் வனம் காட்டுத்தீயால் அழிகிறது. இதன் மூலம் பருவமழை பெய்யாமல், வறட்சியான காலநிலையும், தண்ணீர் பஞ்சமும் அதிகரிக்கும். ஓசோன் படலம் பாதிக்கப்பட்டு, மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படும். காட்டுத்தீ பரவுவதால் வனவிலங்குகள் இடம்பெயர்ந்து மக்கள் குடியிருப்புகளை நாடி வருவதுடன், விவசாய பயிர்களும் பாதிக்கப்படும்.

இதனால், வனப்பகுதிகளில் செல்லும்போது எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்கவும், புகைப்பிடிப்பதை தவிர்க்கவும் வேண்டும். சுற்றுலா பயணிகள் வனங்களை ஒட்டிய சாலைகள், வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.வனத்தில் தீ ஏற்பட்டால் சமூக அக்கறையோடு உடனே பரவாமல் அணைக்கவும், வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் வேண்டும்.

வனங்களுக்கு தீ வைப்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், வனத்துறைக்கு தெரிவித்தால் பெயர் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, தீ வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவசர காலங்களில், 04262-61302 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, மனோகரன் பேசினார். நிகழ்ச்சியில், வனவர் கணேசன், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ராஜேஷ்குமார், வனக்காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X