பொது செய்தி

தமிழ்நாடு

பெற்ற தாய்க்கு சமமானது செவிலியர் பணி! 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி புகழாரம்

Added : பிப் 12, 2020
Advertisement
 பெற்ற தாய்க்கு சமமானது செவிலியர் பணி! 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் ஆர்.லட்சுமிபதி புகழாரம்

கோவை : ''பெற்ற தாய்க்கு சமமானது செவிலியர் பணி,'' என்று, கோவை அன்னை மீனாட்சி நர்ஸிங் கல்லுாரி விழாவில், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி புகழாரம் சூட்டினார்.

கோவை, சுந்தராபுரம் அன்னை மீனாட்சி நர்சிங் கல்லுாரியில், 27வது விளக்கேற்றும் விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:ஒரு தாய், தன் குழந்தையை பெற்றது முதல் வளர்ந்து பெரியவன் ஆகும் வரை கவனம் செலுத்தி வளர்க்கிறார். அதேபோல் நோயாளியின் தேவைகளை பொறுமையாக கேட்டு, கவனித்துக் கொள்வதால், தாய்க்கு சமமானவர்கள் நர்ஸ்கள்தான்.

தொட்டில் முதல் இறுதிக்காலம் வரை நமக்கு நர்ஸ் உதவி தேவைப்படுகிறது. நர்ஸ் பணி என்பது ஆசிர்வதிக்கப்பட்ட பணி. நர்ஸ்கள் இல்லாமல், எந்த ஒரு மருத்துவமனையும் இயங்காது. இது வெறும் ஆரோக்கியம் தொடர்பான பணி மட்டுமல்ல; அது இதயமும் ஆகும். இதமான அன்பும், கவனிப்பும்தான் நர்ஸ்களின் பணி.நாள்தோறும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புகளை தரும் புனிதத் தொழில் நர்ஸிங். நோயாளியை கண்ணும் கருத்துமாக கவனித்து அவர் குணமடைய பக்க பலமாக இருந்து பாதுகாப்பதே நர்ஸின் கடமை. நோய் குணமாக டாக்டர் மருந்து கொடுக்கிறார்.

அந்த மருந்து பலனளிக்க வேண்டுமெனில், அது அக்கறையோடு கவனிக்கும், நர்ஸ்களின் கைகளில் தான் இருக்கிறது.உடலும் உள்ளமும் நலிந்துபோய் இருக்கும் நோயாளிகளுக்கு, அன்பும் ஆதரவும் மிக அவசியம். இந்த சமயத்தில் நோயாளிக்கு தேவை, ஒரு சேய்க்கு தாய் காட்டுவதை போன்ற பரிவும் பாசமுமே.திறமையான நர்ஸ் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைப்பவராகவும், தன் வேலையில் கை தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். நோயாளியிடம் இரக்கம் காட்டுவதுடன், அவர்களுக்கு மனப்பூர்வமாக உதவும் ஆர்வமும் இருக்க வேண்டும்.வேலையில் ஏற்படும் மன இறுக்கத்தை சமாளிக்க அறிந்திருக்க வேண்டும்.

எவ்வளவு பிரமாதமான இயந்திரமாக இருந்தாலும், நர்ஸின் அன்பையும் ஆதரவையும் அந்த இயந்திரத்தால் தர முடியாது.இவ்வாறு, டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார். கல்லுாரி அறங்காவலர் மனோகரன் வரவேற்றார். அறங்காவலர் டாக்டர் நடராஜன், 'வானொலி' தங்கவேலு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.மருத்துவ துறையில் கோவை வளர்ச்சிஉள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது:கல்லுாரி மாணவ, மாணவியர், தங்கள் வாழ்க்கையை செவிலியர் பணிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியாக இந்த விளக்கேற்றும் விழா நடக்கிறது. இந்த கல்லுாரி, அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சிப்பணிகள், இந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில்தான் அதிக பாலங்கள் இருக்கின்றன என்ற நிலையை மாற்றும் வகையில், அதிக பாலங்களை கோவையிலும் கட்டி வருகிறோம். மருத்துவ, சுகாதாரத்துறையிலும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில், 90 கோடி ரூபாயில் பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு, சென்னை சென்ற நிலையை மாற்றி, கோவை அரசு மருத்துவமனையிலேயே அந்த சிகிச்சையை செய்யும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் வேலுமணி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X