சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தம்

Added : பிப் 12, 2020
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த வாகனங்கள் சாலையோரத்தில் வெறுமனே நிறுத்தப்பட்டுள்ளதால், 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில், 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், கிராமப்புறங்களில் இருந்து, கோத்தகிரி நகருக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால், 'பார்க்கிங்' வசதி உட்பட, கட்டமைப்பு வசதிகள் கோத்தகிரியில் குறைவாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும், தனியார் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால், அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த வாகனங்கள், அலுவலகம் அருகில் சாலையோரத்தில் வெறுமனே நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, பழுதடைந்து நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பட்சத்தில், 10க்கும் மேற்பட்ட வாகனங்களை, இப்பகுதியில் நிறுத்த முடியும் என்பதால், சம்பந்தப்பட்ட நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X