சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜப்தியை கண்டித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 12, 2020
Advertisement
 ஜப்தியை  கண்டித்து  3 பேர் தீக்குளிக்க முயற்சி

பல்லடம் : பல்லடம் அருகே ஜப்தி நடவடிக்கையைக் கண்டித்து, விவசாயி குடும்பத்தை சேர்ந்த மூவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சின்னியகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 70; விவசாயி. இங்குள்ள, செட்டிபாளையம் ரோட்டில், தனக்கு சொந்தமான, 70 சென்ட் இடத்தில், வீடு கட்டி, மனைவி சித்ரா, 65, மகன் பிரபு, 30, மருமகள் இசையமுது, 25 ஆகியோருடன், வசிக்கிறார்.மகன் பிரபு தொழில் தொடங்க வேண்டி, அவிநாசி, 'பேங்க் ஆப் இந்தியா' கிளையில், 1.3 கோடி ரூபாயை, இடத்தின் பெயரில், ஈஸ்வரன் கடனாக பெற்றார். கடந்த 2015ம் ஆண்டு வரை, 90 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியுள்ளார்.

வட்டியுடன் சேர்த்து, 62 லட்சம் ரூபாய் பாக்கி இருந்ததால், கோர்ட் உத்தரவின்படி, வங்கி நிர்வாகத்தினர், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள, ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்தனர்.இதற்கு, ஈஸ்வரன் மற்றும் குடும்பத்தினர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சித்ரா, பிரபு, இசையமுது ஆகியோர், வீட்டுக்குள் சென்று, திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் மற்றும் பொதுமக்கள், இதைத் தடுத்து நிறுத்தினர்.தாசில்தார் சிவசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் வங்கி அதிகாரிகள், ஈஸ்வரன் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினர்.

'நிலுவையில் உள்ள கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து கட்ட, இரு மாத அவகாசம் வேண்டும்' என்ற, ஈஸ்வரன் குடும்பத்தினரின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.ஜப்தி நடவடிக்கையை கண்டித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம், பல்லடத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X