தேயிலைக்கு விலை உயர்த்த கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலைக்கு விலை உயர்த்த கோரிக்கை

Added : பிப் 12, 2020
Share

பந்தலுார் : பந்தலுாரில் இ.கம்யூ., மாவட்ட குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் போஜராஜ் வரவேற்றார்.

வட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக, 30 ரூபாய் வழங்கும் வரை மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், 'இன்கோ' தொழிற்சாலையில் சிறு விவசாயிகளிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும்; நெல்லியாளம் நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்; தேயிலை துாள் கிலோவிற்கு, 140 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கட்சி பொருளாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் பெள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X