சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: வேண்டாம் மன அழுத்தம்

Added : பிப் 12, 2020
Advertisement
அறிவியல் ஆயிரம்: வேண்டாம் மன அழுத்தம்

இந்தியாவில் கருவுற்ற பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு எடை குறைந்த குழந்தை பிறக்கிறது என பெங்களூருவில் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள், இப்பாதிப்பை சந்திக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள், எடை குறைவாக பிறக்கின்றன. இதற்கு காற்று மாசுபாடு, சத்து குறைபாடு ஆகியவை காரணமாக உள்ளது. தற்போது இதனுடன் மன அழுத்தமும், எடை குறைவான குழந்தை பிறப்புக்கு காரணமாக அமைகிறது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


தகவல் சுரங்கம்: அலைகளின் ராணி

அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் தெற்கு பகுதியையும், பிரான்சின் வடக்குப் பகுதியையும் பிரிப்பது தான் ஆங்கிலக்கால்வாய். இதன் அதிகபட்ச நீளம் 560 கி.மீ., அதிகபட்ச அகலம் 240 கி.மீ., அதிகபட்ச ஆழம் 571 அடி. உலகில் பல வீரர்கள் இதனை நீந்தி கடந்துள்ளனர். பிசியான கடல் போக்குவரத்து உள்ள பகுதிகளில் இதுவும் ஒன்று. உலகில் முதன்முதலில் இக்கால்வாயை நீந்திய பெண்மணி ஜெர்ட்ரூட் எடர்ல். 1906ல் பிறந்த அமெரிக்க நீச்சல் வீரரான இவர், 1926 ஆக., 6ல் இச்சாதனையை நிகழ்த்தினார். இவர் 'அலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X