பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (1)
Advertisement
TamilNadu,election_commission,Voter_list,வாக்காளர்பட்டியல்

சென்னை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் திருத்தப் பணி நிறைவடைந்து 2019 ஜன. 31ல் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டது. அதன்படி 5.91 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

அதே ஆண்டு மார்ச் 26ல் லோக்சபா தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 5.98 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அடுத்து டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 2.96 கோடி ஆண்கள்; 3.03 கோடி பெண்கள்; 5924 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 1329 வாக்காளர்கள் இருந்தனர்.

அதன்பின் மீண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்தது. பொது மக்கள் வசதிக்காக ஜன. 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நான்கு நாள் முகாம் மற்றும் 'ஆன்லைன்' வழியே 17.01 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்க்க வலி யுறுத்தி 13.16 லட்சம் பேர்; நீக்கக் கோரி 1.02 லட்சம் பேர்; திருத்தம் கோரி 1.73லட்சம் பேர்; முகவரி மாற்றக் கோரி 1.08 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

விண்ணப்பங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் பெயர் நீக்கமும் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-பிப்-202006:15:58 IST Report Abuse
blocked user ஆதார் எண்ணுடன் இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X