சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டில் பெயர் மாற்ற லஞ்சம் தாசில்தார், ஊழியருக்கு ஓராண்டு சிறை

Added : பிப் 12, 2020
Advertisement

கோவை : ரேஷன் கார்டில் பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வழக்கில், தாசில்தார் மற்றும் ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, செல்வபுரத்தை சேர்ந்தவர் காசாளபாண்டி. நகை பட்டறை தொழிலாளி. இவரது குடும்ப அட்டையில், காசாளபாண்டி என்பதற்கு பதிலாக, 'காசபாண்டி' என அச்சடிக்கப்பட்டு இருந்தது. பெயரில் எழுத்துப்பிழை திருத்தம் செய்ய, கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திலுள்ள, குடிமைப்பொருள் பிரிவில் விண்ணப்பித்தார்.பெயர் மாற்றி தருவதற்கு, இளநிலை உதவியாளர் வனிதா பிரபா, 50, தாசில்தார் ராஜேஸ்வரி, 55, ஆகியோர், 700 ரூபாய் லஞ்சம் கேட்டனர்.லஞ்ச ஒழிப்பு போலீசில் காசாளபாண்டி புகார் அளித்தார்.

போலீசார் அறிவுரைப்படி, கடந்த 2010, நவ., 8ல், தாசில்தார் அலுவலகம் சென்று லஞ்சம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.இருவர் மீதும், கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி தோத்திரமேரி, குற்றம் சாட்டப்பட்ட வனிதா பிரபா, ராஜேஸ்வரி ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறை, தலா, 4000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X