பொது செய்தி

தமிழ்நாடு

'கல்வியில் சாதிக்கும் வரை போன் வேண்டாம்' ; அரசு பஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2020
Advertisement

குன்னுார் : 'கல்வி பயின்று, சாதிக்கும் வரை மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம்,'' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், 154வது ஆண்டு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு, பள்ளி தாளாளர் தாமஸ் செல்வம் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மும்பை காவல்துறை இணை ஆணையர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில்,''கல்வி ஒன்றுதான் வறுமையை, அறியாமையையும் விரட்டும். கல்வி பயின்று, சாதிக்கும் வரை மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம்.

தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது, திருத்துவதற்காகதான். மாணவர்கள் தவறான வழிகளில் செல்லாமல், படிப்பு, விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்,''என்றார். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், ஜேம்ஸ் மார்ஷல், ராஜேந்திரன், சேவியர், அருள் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, முதன்மை விருந்தினராக பெங்களூரு, 'மவுன்ட் போர்டு' சபை மண்டல தலைவர் ஜார்ஜ் பேசினார்.

'உன்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை ஊட்டும், தமிழ் நாடகம் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், டிஜிட்டல் மின்விளக்கு அலங்காரத்தில் நடந்தது அனைவரையும் கவர்ந்தது. பாலக்காடு மாவட்ட கலெக்டர் பாலா; மும்பை வருமான வரி துறை இணை ஆணையர் ஜஸ்டின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X