மல்லையா வழக்கு 2வது நாளாக விசாரணை

Added : பிப் 12, 2020
Advertisement

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது.

பல்வேறு வங்கிகளுக்கு 9000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து அவர் பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார்.

அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அவரை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்கின் விசாரணை துவங்கியுள்ளது. இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது.

'மல்லையா வேண்டுமென்றே கடன் நிலுவை வைக்கவில்லை. இந்திய அரசின் கொள்கைகளால் விமானப் போக்குவரத்து துறை அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அதனால்தான் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் கடனை செலுத்த முடியவில்லை' என மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.இன்றும் விசாரணை தொடர்கிறது.

சி.பி.ஐ. அமலாக்கத் துறை மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். மல்லையாவும் ஆஜரானார்.
விரைவில் வருகிறார் சஞ்சிவ் சாவ்லா

இந்தியாவில் 2000ல் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டம் நடந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்த ஹன்சி குரேனியே மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய குற்றவாளியான சஞ்சிவ் சாவ்லா லண்டனுக்கு தப்பிச் சென்றார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதையடுத்து மிக விரைவில் அவர் டில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X