சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் எரிப்புக்கு கண்டனம்இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Added : பிப் 12, 2020
Advertisement
 கார் எரிப்புக்கு கண்டனம்இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பந்தலுார் : திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி காரை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

பந்தலுார் தாலுகா தலைவர் முரளி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார்.இதில்,'இந்து முன்னணி நிர்வாகிகள் மீது, தொடர் தாக்குதல் நடத்தி வரும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைதியை கெடுக்கும் வகையில் செயல்படும் கும்பல்களை கண்டறிந்து தடை செய்ய வேண்டும்; திருப்பூரில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் காரை எதிர்த்தவர்களை கைது செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர், ஆர். சுரேஷ், பா.ஜ., நெல்லியாளம் நகர செயலாளர் தீபக்ராம், சரவணன், சுரேஷ்உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X