இந்திய அரசின் கொள்கைகளால் நஷ்டம்: மல்லையா தரப்பு வாதம்

Updated : பிப் 12, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை, இரண்டாவது நாளாக இன்றும்(பிப்.,12) நடந்தது.பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார்.அவரை நாடு கடத்தி வருவதற்கான
Mallya,VijayMallya,London_court,மல்லையா,லண்டன்,கோர்ட்

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை, இரண்டாவது நாளாக இன்றும்(பிப்.,12) நடந்தது.

பல்வேறு வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார்.அவரை நாடு கடத்தி வருவதற்கான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அவரை நாடு கடத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, மல்லையா தொடர்ந்த வழக்கின் விசாரணை துவங்கியுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடந்தது.


latest tamil news



'மல்லையா வேண்டுமென்றே கடன் நிலுவை வைக்கவில்லை. இந்திய அரசின் கொள்கைகளால், விமானப் போக்குவரத்து துறை அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் நஷ்டம் ஏற்பட்டதால், அவரால் கடனை செலுத்த முடியவில்லை' என, மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். நாளையும் விசாரணை தொடர்கிறது.

சி.பி.ஐ., அமலாக்கத் துறை மற்றும் இந்திய துாதரக அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். மல்லையாவும் ஆஜரானார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
13-பிப்-202012:21:44 IST Report Abuse
Anand இவன் சொத்துக்கள் அனைத்தையும் கையகப்படுத்தி லண்டனிலேயே விட்டுவிடவேண்டும். சாகும்வரை அவன் அங்கேயே பிச்சையெடுத்து சாகவேண்டும்.
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-பிப்-202010:40:32 IST Report Abuse
நக்கீரன் இந்திய அரசின் கொள்கைகள் சரியில்லை என்றால் என்ன முடிக்கு கடன் வாங்கி தொழில் ஆரம்பிச்ச? இப்படி ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தால் வங்கிகள் திவாலாவது உறுதி. அழகிகளோடு கும்மாளம் அடிக்கவும் IPL அணியை வாங்க மட்டும் காசு எப்படி வந்துச்சு?
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
13-பிப்-202010:17:02 IST Report Abuse
Rpalnivelu //சோ, மோடியால் ஆசீர்வாதம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மல்லையா // அறிவிலி பேப்பரை படித்தால் இப்படிதான். போயி தினமலர் நாளிதழையும் துக்ளக் வாரஇதழையும் வாங்கி படித்து அறிவாளியாகு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X