பொது செய்தி

இந்தியா

'இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்துங்கள்'

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (49)
Advertisement
PM,Modi,tax,பிரதமர்,மோடி,வரி

புதுடில்லி : ''வரி விதிப்பிற்கு உட்பட்டோர் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன்வர வேண்டும்'' என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் 'டைம்ஸ் நவ்' மாநாட்டில் அவர் பேசியதாவது: முந்தைய ஆட்சியாளர்கள் வருமான வரியில் சீர்திருத்தம் செய்ய தயங்கினர். இப்போது வருமான வரி திட்டத்தை குடிமக்கள் சார்ந்ததாக மாற்றி அமைத்து வருகிறோம். நாட்டில் 2200 பேர் தான் தங்களின் ஆண்டு வருமானம் ஒருகோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது நம்ப முடியாத வகையில் உள்ளது.

ஏராளமானோர் வரி செலுத்த விரும்பாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதனால் நேர்மையாக வரிசெலுத்துவோர் மீதுதான் சுமை விழுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி விதிப்புக்கு உட்பட்டோர் அனைவரும் வரி செலுத்த முன்வர வேண்டும். இந்தியா இனி நேரத்தை வீணாக்காது. நம்பிக்கையுடன் எழுச்சி நடைபோடும். மத்திய பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
13-பிப்-202023:36:34 IST Report Abuse
unmaitamil ஒரு படத்திற்கு வசூல் 300 கோடி என்பான். ஐம்பது கோடி சம்பளம் என்பான். அதில் வரி 30%, பதினைந்து கோடி கட்டு என்றால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆர்ப்பாட்டம் செய்வான். அவன் பின்னால் ஒரு வேலை வெட்டி இல்லாத முட்டாப்பய திருட்டு கூட்டம். மோடி சொல்வது இந்த ஏமாற்று பேர்வழிகளுக்குத்தான். இது புரியாம சில சொம்புகள் இங்கு ஊளையிடுது ??
Rate this:
Share this comment
Cancel
Prof T R Sankara Narayanan - MADURAI,இந்தியா
13-பிப்-202023:23:26 IST Report Abuse
Prof T R Sankara Narayanan 30 ஆண்டுகள் பணியின் போது வரி செலுத்தி பின் சாகும் வரை வாங்கும் பென்ஷனுக்கு வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர்கள் இளிச்சவாயன்கள் ஆனால் மோடி உள்பட எந்த ஒரு மந்திரியோ MLA MPயோ தான் வாங்கும் ஊதியம் மற்றும் பென்ஷனுக்கு வருமான வரி செலுத்த மாட்டார்கள். தங்களுக்கு கட்சி நிதி அளிக்கும் தொழில் அதிபர்கள் கடனை தள்ளுபடி செய்து வெளி நாட்டிற்கு தப்பி செல்ல விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
13-பிப்-202022:31:43 IST Report Abuse
m.viswanathan நீங்க பல்லக்கில் போங்க , நாங்க தூக்கி சுமக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X