இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்துங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்துங்கள்'

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 12, 2020 | கருத்துகள் (49)
Share
புதுடில்லி : ''வரி விதிப்பிற்கு உட்பட்டோர் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன்வர வேண்டும்'' என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டில்லியில் 'டைம்ஸ் நவ்' மாநாட்டில் அவர் பேசியதாவது: முந்தைய ஆட்சியாளர்கள் வருமான வரியில் சீர்திருத்தம் செய்ய தயங்கினர். இப்போது வருமான வரி திட்டத்தை குடிமக்கள் சார்ந்ததாக மாற்றி அமைத்து வருகிறோம். நாட்டில் 2200 பேர்
PM,Modi,tax,பிரதமர்,மோடி,வரி

புதுடில்லி : ''வரி விதிப்பிற்கு உட்பட்டோர் அனைவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன்வர வேண்டும்'' என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் 'டைம்ஸ் நவ்' மாநாட்டில் அவர் பேசியதாவது: முந்தைய ஆட்சியாளர்கள் வருமான வரியில் சீர்திருத்தம் செய்ய தயங்கினர். இப்போது வருமான வரி திட்டத்தை குடிமக்கள் சார்ந்ததாக மாற்றி அமைத்து வருகிறோம். நாட்டில் 2200 பேர் தான் தங்களின் ஆண்டு வருமானம் ஒருகோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது நம்ப முடியாத வகையில் உள்ளது.

ஏராளமானோர் வரி செலுத்த விரும்பாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனர். இதனால் நேர்மையாக வரிசெலுத்துவோர் மீதுதான் சுமை விழுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு வரி விதிப்புக்கு உட்பட்டோர் அனைவரும் வரி செலுத்த முன்வர வேண்டும். இந்தியா இனி நேரத்தை வீணாக்காது. நம்பிக்கையுடன் எழுச்சி நடைபோடும். மத்திய பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X